நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை 

வடமேற்கு மாகாணத்தில் பல தடவை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தில் பல தடவை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT