மே தினத்தை முன்னிட்டு 'ப்றொடெக்ட்' சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

'உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மே தினத்தை முன்னிட்டு 'ப்றொடெக்ட்' சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து 'ப்றொடெக்ட்' சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று (01) நடைபெற்றது.

'உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வீட்டுத் தொழிலாளர்களும் தொழிலாளர்களே, அவர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,  புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து பதாகைகள் ஊடாக காட்சிப்படுத்தபட்டிருந்தன.

அத்தோடு, எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. (க.கிஷாந்தன்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT