கனடாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட பிரபுதேவா மற்றும் ரம்பா; சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

தொண்ணூறுகளின் பிரபல திரைநட்சத்திரங்களான பிரபுதேவாவும் ரம்பாவும் கனடாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கனடாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட பிரபுதேவா மற்றும் ரம்பா; சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடிகளாகக் கோலோச்சிய நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை ரம்பா ஆகியோர் கனடாவில் சந்தித்துக்கொண்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 'டா-பாங்' சுற்றுப்பயணத்தின் போது கனடாவில் சந்தித்துக் கொண்ட இந்த ஜோடி, தற்போது மீண்டும் சந்தித்து மகிழ்ந்துள்ளது.

கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் நடிகை ரம்பாவின் இல்லத்திற்குப் பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளார். ரம்பாவின் வீட்டுத் தோட்டம் மற்றும் அருகில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நீர்நிலைப் பின்னணியில் இருவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் தங்களது குழந்தைகளுடன் பிரபுதேவா மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்ட புகைப்படங்களை ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள நடிகை ரம்பா, பிரபு மாஸ்டர் எங்களுடன் இருப்பதாகவும், அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் மிகச் சிறந்த நேரத்தைச் செலவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

வி.ஐ.பி மற்றும் காதலா காதலா போன்ற திரைப்படங்களில் இவர்களின் இணையும் நடனமும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT