அஸ்வெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அஸ்வெசும கொடுப்பனவு

4 மாவட்டங்களில் இதுவரையில் அஸ்வெசும கொடுப்பனவுகளை பெறாத அனைவருக்கும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிலுவைத் தொகையுடன் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இம்மாவட்டங்களில் பயனாளிகள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாலும், இந்த மாவட்டங்களில் அதிக அளவு ஒதுக்கீடு இருப்பதால் இந்த பிரச்சினை எழுந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனினும், ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தப் பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்படும்.

அத்துடன் இந்த கொடுப்பனவானது, அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட்ட  கடந்த ஜூலை 2023 முதல் இதுவரையான நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT