வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது. 

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
ADVERTISEMENT
ADVERTISEMENT

இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தேங்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (20) வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஜப்பானின் ஏற்றுமதி பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்கள், அந்த வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜப்பான் உள்ளிட்ட சகல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பரிசோதனை சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் வகையிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT