வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.