இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது

அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் கணவனின் மைத்துனன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்,அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

முன்னதாக, அங்குருவாதொட்ட, உருதுதாவ பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்   இருவரும் நேற்று  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT