காணாமல்போன மாணவிகள் மீட்கப்பட்டனர் - வெளியான தகவல்!

இங்கினியாகலயிலுள்ள பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகளும்  இந்த வருடம் க.பொ.த பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

காணாமல்போன மாணவிகள் மீட்கப்பட்டனர் - வெளியான தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அம்பாறையின் இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும்  அக்குருமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீகஹவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கினியாகலயிலுள்ள பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகளும்  இந்த வருடம் க.பொ.த பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த மாணவிகள் இருவரும் கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பெற்றோர்  இங்கினியாகலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், மீகஹவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில்  இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு மாணவிகளும் கொழும்புக்கு வந்து மாணவி ஒருவருடன் தொடர்பில் இருந்த இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்தி  அவரைச் சந்தித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT