புதிய படத்தை ஒப்பிடாதீர்கள்: சிவா வேண்டுகோள்

கடந்த 1972ல் முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஹிட்டானகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம், 'காசேதான் கடவுளடா'.

புதிய படத்தை ஒப்பிடாதீர்கள்: சிவா வேண்டுகோள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 1972ல் முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஹிட்டானகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம், 'காசேதான் கடவுளடா'.

இப்படத்தின் ரீமேக்கை அதே பெயரில் இயக்கியுள்ளார், ஆர்.கண்ணன். இதில் முத்துராமனாக சிவா, லட்சுமியாக பிரியா ஆனந்த், தேங்காய் சீனிவாசனாக யோகி பாபு, மனோரமாவாக ஊர்வசி நடித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மற்றும் கருணாகரன், புகழ், சிவாங்கி, தலைவாசல் விஜய், மனோபாலா நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜ் பிரதீப் இசை அமைத்துள்ளார். முந்தைய படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சிவா கூறியதாவது: எல்லாப் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல், இப்படத்தையும் கண்டிப்பாக ஒப்பிடுவார்கள். 'காசேதான் கடவுளடா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற கிளாசிக் காமெடி படம். 

அதைவிடச் சிறப்பாக எங்களால் உருவாக்க முடியாது. எனவே, அப்படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால், நிச்சயம் உங்களை எங்கள் படம் மகிழ்விக்கும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

51 வருடங்களுக்கு முன்பு அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை, தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றி உருவாக்குவது என்பது சவாலான விஷயம். தொழில்நுட்ப வளர்ச்சியால் அக்காட்சிகளை எப்படிப் படமாக்குவார் என்று யோசித்தேன். 

ஆனால், ஆர்.கண்ணன் மிகச்சிறந்த அணுகுமுறையுடன் அக்காட்சிகளைப் படமாக்கினார்” என்றார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT