சூர்யாவிடம் உள்ள கெட்ட பழக்கத்தால் தினமும் சண்டை - ஜோதிகா சொன்ன சீக்ரெட் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
ஜோதிகா மும்பையிலேயே சூர்யாவுடன் செட்டில் ஆகிவிட்டதுடன், அவர்கள் தமது 18வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், ஜோதிகா அளித்த பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்த விடயங்கள் வைரலாகி வருகின்றன.
சூர்யா நட்புடன் தன்னுடன் பழகுவார் என்றும் தனக்கு நிறைய மரியாதை கொடுப்பார் என்றும் அது தனக்கு மிக பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும், சூர்யா பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவார் என்றும், அதுவே தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம் என்றும், அதற்காக தினமும் காலை இருவருக்கும் சண்டை நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.