ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

குஜராத் அணியை கடந்த 2 ஆண்டுகள் வெற்றிகரமாக வழிநடத்திவ் வந்தவர் ஹர்திக் பாண்டியா. 2022-ல் ஹர்திக்கின் தலைமையின் கீழ் தான் அந்த அணி கோப்பை வென்றது. தற்போது குஜராத் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மும்பை அணியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டே ரோகித் சர்மா கேப்டனாக விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக்கப்பட்டிருக்கிறார் என மும்பை அணி விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனிடையே, 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை திடீரென மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றியது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் ரோகித்துக்கு ஆதரவாகவும் மும்பை அணியை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். இதே போல இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ஃபாலோயர்கள் எண்ணிக்கை மளமளவென சரிந்து வருகிறது. இது வரை சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் Unfollow செய்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT