முச்சக்கர வண்டிக்குள் சிசுவின் சடலம் மீட்பு

சிசுவின் சடலத்தை அங்கு கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.

முச்சக்கர வண்டிக்குள் சிசுவின் சடலம் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில்  கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில்  இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில்  சென்று  பார்த்த போது பொலித்தீன் உரையில் போடப்பட்டு  துணி ஒன்றில்  சுற்றி  மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிசுவின் சடலத்தை அங்கு கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.

எனினும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்காக  சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், நுவரெலியா மாவட்ட நீதவான்  பார்வையிட்ட பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT