இந்தியா - இலங்கை 3ஆவது டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பா? 

இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இந்தியா - இலங்கை 3ஆவது டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பா? 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லேகலவில் இன்று நடக்கிறது.

முதல் போட்டி முழுமையாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா சேசிங் செய்த போது மழை குறுக்கிட்டது. அதனால், இந்தியாவுக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் என வெற்றி இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் போதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

போட்டி நடைபெறும் நேரத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மழையால் போட்டி தாமதமாகக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT