இந்தியா வென்றால் "கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்"...  பிரபல நடிகை அறிப்பு 

இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

நவம்பர் 17, 2023 - 17:25
இந்தியா வென்றால் "கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்"...  பிரபல நடிகை அறிப்பு 

இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.

அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. 

இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர். 

ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, 'இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார். 

சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19ஆம் திகதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். 

ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே பின்னர் அமைதியாகி போனார் என்பதும், பின்னர் அவர் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!