12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் : ஜூன் 18 செவ்வாய்க்கிழமை 2024

கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் : ஜூன் 18 செவ்வாய்க்கிழமை 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேஷம்

மனைவியின் பங்காக சிறிய சொத்து ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கம் இழப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். உறவினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் உண்டான எதிர்ப்புகளையும் மன உளைச்சலையும் கடந்து செல்வீர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரிஷபம் 

காணாமல்போன பொருளை தேடி கண்டு பிடிப்பீர்கள். வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள். வெளியூரில் சந்திக்க வேண்டிய நபர்களால் பயன் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி ஒன்றை பெறுவீர்கள். கால நேரம் பார்க்காமல் வேலை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆன்லைன் போன்ற சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள்.

மிதுனம் 

ADVERTISEMENT
ADVERTISEMENT

வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்றுவீர்கள்.மனதில் தைரியமும் வேகமும் அதிகரித்து வியாபாரத்தை விருத்தி செய்தீர்கள். சகோதர வகையில் ஆதாயம் அடைவீர்கள். ஆனால், குடும்பத்தில் நிம்மதி குறைந்து சஞ்சலப்படுவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெறியோடு படித்து வெற்றி காண்பீர்கள்.

கடகம்

தென்னைமரதோப்பு குத்தகைகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள். நீண்டநாள் நண்பரின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவீர்கள். காதலியின் உறுதுணையால் வேலைப்பளுவை குறைப்பீர்கள். முக்கிய கடனை அடைப்பீர்கள்.

சிம்மம்

கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் அடைவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் எல்ஐசி முகவர்கள் அதிக பாலிசி சேர்ப்பீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு நேர்வழியில் நடப்பீர்கள்.

கன்னி

கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவியில் மாற்றமும் ஊதிய உயர்வும் அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். மாமனாரின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

அதிக சிரமப்பட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்த இரவுத் தூக்கத்தை தொலைப்பீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலைகள் தாமதமாகவே நடப்பதால் தளர்ச்சி அடைவீர்கள். உறவினர்கள் உங்களை அவமானப்படுத்த நினைப்பார்கள். அதைக் கடந்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறப்பான அனுகூலம் பெறுவீர்கள்.

விருச்சிகம்

வாகனங்கள் பழுதாகி எதிர்பாராத செலவை செய்வீர்கள். வீடு கட்டும் வேலைகளில் சுணக்கத்தை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையால் சங்கற்றப்படுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆபத்தை சந்திப்பீர்கள். பணியாளர்கள் பைல்களைக் கையாளும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். வாக்குறுதி வழங்கி அவதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

தனுசு

திடீர் பணவர வந்து முக்காடி நிற்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள். வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். இல்லத்தரசிகள் கணவருக்கு உறுதுணையாகத் திகழ்வீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செய்வீர்கள்.

மகரம்

தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு, மரியாதை. செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.

கும்பம்

பிள்ளைகளின் வகையில் பெற்றோர்கள் சோதனையைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள் உருவாகி வீட்டை ரணகளம் ஆக்குவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும் கை மீறி போவதால் கவலைப்படுவீர்கள். மனைவியின் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள செய்வீர்கள். சந்திராஷ்டமம். நிதானமாக செயல்படுங்கள்.

மீனம்

அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள். வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் பயன் அதிகம் பெற மாட்டீர்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். சின்ன காயம் படுவீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT