இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை; வெளியான அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை; வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 7

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT