அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் இன்று மழை

 இன்று (11), வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் இன்று மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இன்று (11), வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT