மழையுடனான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யும்.

மழையுடனான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT