கொட்டித் தீர்க்கும் மழை... இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில், 2க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
கொட்டித் தீர்க்கும் மழை... இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (29) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில், 2க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -