சிறுமி வன்புணர்வு; தந்தை - மாமனார் கைது

சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.

சிறுமி வன்புணர்வு; தந்தை - மாமனார் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

மட்டக்களப்பு பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில், 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய சிறுமியின் மாமனாரும் இணைந்து கூட்டாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT