உருளைக்கிழங்கு பிரியரா நீங்க? பிரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டால் நீரிழிவு அபாயம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்!

வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் பிரெஞ்ச் ஃப்ரைஸ் அல்லது சிப்ஸ் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகரிப்பதாகப் புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

உருளைக்கிழங்கு பிரியரா நீங்க? பிரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டால் நீரிழிவு அபாயம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகளவில் பெரும்பாலான மக்களின் விருப்பமான உணவாக உருளைக்கிழங்கு இருந்தாலும், அதில் உள்ள அதிகப்படியான மாவுச்சத்து (Starch) மற்றும் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது.

இது குறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, உருளைக்கிழங்கைச் சமைக்கும் முறைக்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, உருளைக்கிழங்கை வேகவைத்து அல்லது மசித்துச் சாப்பிடுவதை விட, அதனை எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் சிப்ஸ்: அதிகரிப்பதாக நீரிழிவு அபாயம்

இந்த ஆய்வில் வறுத்த உருளைக்கிழங்கு (French Fries and Chips) உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை வறுத்து வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 20% அதிகரிக்கிறது.

 இதுவே வாரத்திற்கு ஐந்து முறை என அதிகரிக்கும் போது, அந்த ஆபத்து 27% ஆக உயர்கிறது. இதற்கு மாறாக, உருளைக்கிழங்கை வேகவைத்து அல்லது மசித்துப் பயன்படுத்தும் போது நீரிழிவு நோய்க்கான வாய்ப்பு வெறும் 5% மட்டுமே அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உருளைக்கிழங்கை உட்கொள்ளும் முறையே ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.

ஆரோக்கியமான மாற்று உணவுகளும் தீர்வுகளும்

நீரிழிவு நோய்க்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க உருளைக்கிழங்கிற்குப் பதிலாக முழு தானியங்களான பழுப்பு அரிசி (Brown Rice) மற்றும் முழு கோதுமை பாஸ்தா போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய உணவு மாற்றங்கள் நீரிழிவு ஆபத்தை 8% வரை குறைக்க உதவுகின்றன. குறிப்பாக, பிரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்தால், இந்த ஆபத்து 19% வரை குறைகிறது. அதே சமயம், வெள்ளை அரிசி போன்ற அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளின் உணவுப் பழக்கம்

குழந்தைகள் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிரெஞ்ச் ஃப்ரைஸ் வகைகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதால், பெற்றோர்கள் அதனைத் தடையின்றி வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், சிறுவயதிலேயே இத்தகைய வறுத்த உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அடித்தளத்தை அமைத்துவிடும் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

எனவே, உருளைக்கிழங்கை வறுப்பதைத் தவிர்த்து, வேகவைத்து அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுப்பதே சிறந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT