FIFA 2026: மூன்று நாடுகள், ஒரு பந்து! Adidas நிறுவனத்தின் ‘TRIONDA’ பந்தின் புதிய தொழில்நுட்பம் என்ன?

23ஆவது FIFA உலகக் கிண்ணத் தொடரை முதல் முறையாக கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
FIFA 2026: மூன்று நாடுகள், ஒரு பந்து! Adidas நிறுவனத்தின் ‘TRIONDA’ பந்தின் புதிய தொழில்நுட்பம் என்ன?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அதிகாரப்பூர்வ பந்தாக ‘TRIONDA’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பெயருக்கு “மூன்று அலைகள்” என்ற அர்த்தம் இருப்பதாக அதனை வடிவமைத்த Adidas நிறுவனம் தெரிவித்துள்ளது.

23ஆவது FIFA உலகக் கிண்ணத் தொடரை முதல் முறையாக கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அந்த வரலாற்றுச் சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் பந்தின் வடிவமைப்பில் மூன்று நாடுகளின் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை அடையாள நிறங்களும் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சிவப்பு நிறப் பகுதிகள்:
- கனடாவைப் பிரதிபலிக்கிறது.
- அதன் தேசியக் கொடியில் இருக்கும் மேப்பல் இலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

பச்சை நிறப் பகுதிகள்:
- மெக்சிகோவைக் குறிக்கிறது.
- அதன் தேசியக் கொடியில் உள்ள கழுகைச் சித்திரிக்கும் விதமாகக் கழுகின் முகம் அவற்றை அலங்கரிக்கின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீலம் நிறப் பகுதிகள்:
- அமெரிக்காவை அடையாளப்படுத்துகிறது.
- அதில் அச்சிடப்பட்டுள்ள நட்சத்திரச் சின்னங்கள் அமெரிக்கத் தேசியக் கொடியின் நட்சத்திரங்களை நினைவூட்டுகின்றன.

வெறும் 4 வெளிப்புறப் பகுதிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் பந்தும் இதுவே. வெயிலிலும் மழையிலும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளதாய்ச் சொல்கிறது Adidas.

தோற்றத்தைத் தாண்டி பந்தின் வடிவமைப்பில் தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆட்டத்தின்போது நடுவர் பந்தின் நகர்வுகளைத் துள்ளியமாகக் கணிக்க உதவ அதில் சிறப்பு உணர்கருவிச் சில்லு பொருத்தப்பட்டுள்ளது மேலும் ஒரு கூதல் சிறப்பு.

Click for more latest கால்பந்து news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -