நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT