இலங்கையின் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

அடுத்த வருடத்துக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இலங்கையின் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“அடுத்த வருடத்துக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசெம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.

அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் டிஜிட்டல் மயமாக்கல் முறையை பின்பற்ற வேண்டும். கல்வி சீர்திருத்த வேலைத்திட்டம் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் தொடர வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT