இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென அதிகரிப்பு

இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இது திடீர் அதிகரிப்பாகும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.96 ரூபாயாகவும், கொள்வனவு விலை 321.59 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.83 ரூபாயாகவும், கொள்வனவு விலை 233.03 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.65 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி 342.73 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.32 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி 395.57 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT