உயர்தர பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

உயர்தர பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

பரீட்சை  நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT