டெக்சாஸ் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

முகாமில் இருந்தவர்கள், விடுமுறைக்கு வந்தவர்கள் மற்றும் காணாமல் போன குடியிருப்பாளர்களைத் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாகத் தேடுகின்றனர்.
டெக்சாஸ் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும் 20 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை பெய்தது. மத்திய கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பல மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை, வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 43பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் மூலமாக 167 பேர் உட்பட மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே ஆற்றின் அருகே முகாமிட்டுள்ள சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். முகாம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டதில் 20 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். 

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இறந்தவர்கள் யார் என அடையாளம் காணும் பணியையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -