குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்

சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சினோபெக் நிறுவனம் செப்டெம்பர் மாதம் முதல் நிறுவனத்தின் வர்த்தக நாமத்தில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT