சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ‘சேயோன்’ ஸ்பெஷல் வீடியோ – ரசிகர்களை உற்சாகப்படுத்திய மிரட்டலான லுக்

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26ஆவது திரைப்படமான சேயோன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படமாகும். இத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கணிசமாக உயர்த்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (17) தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தச் சிறப்பு நாளை முன்னிட்டு, திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும் விதமாக, ‘சேயோன்’ படக்குழு ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

வெளியான அந்த வீடியோவில், சிவகார்த்திகேயன் இதுவரை பார்த்திராத மிரட்டலான மற்றும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது இந்த புதிய லுக் மற்றும் காட்சிகள், ‘சேயோன்’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. பிறந்தநாளில் வெளியான இந்த ஸ்பெஷல் வீடியோ, ரசிகர்களின் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT