மீண்டும் மழை - நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மழை - நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடமேற்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும்.

மற்ற பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வரை காற்று வீசும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT