உலகக்கோப்பை இறுதிப்போட்டியால் நாளை பாடசாலைக்கு விடுமுறை .. எங்கு தெரியுமா?

மாணவர்கள் அந்தப் போட்டியைக் கண்டு களித்து மறுநாளும் ஓய்வு எடுக்கும் வகையில் விடுமுறை அளித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 

உலகக்கோப்பை இறுதிப்போட்டியால் நாளை பாடசாலைக்கு விடுமுறை ..  எங்கு தெரியுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

ரோஹித் சர்மா  சிறு வயதில் படித்த மும்பையிலுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்துக்கு நாளை நவம்பர் 20 திங்கள் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இரவு வரை பார்க்க வேண்டும் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அந்தப் போட்டியைக் கண்டு களித்து மறுநாளும் ஓய்வு எடுக்கும் வகையில் விடுமுறை அளித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒருவேளை இந்தியா உலகக்கோப்பை வென்றால் அதை கொண்டாடும் வகையில் முன் கூட்டியே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாங்கண்ணி பள்ளி நிர்வாகம் சார்பில் சிறுவனாக ரோஹித் சர்மா தங்கள் பள்ளியில் சேர்ந்த போது கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியான இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். தன் சுயநலம் பார்க்காமல் அணிக்காக அதிரடியாக குறைந்தது 40 ரன்கள் குவித்து அணியின் ரன் ரேட்டை முதல் சில ஓவர்களிலேயே உயர்த்தி விடுகிறார் ரோஹித் சர்மா. இறுதிப் போட்டியில் அந்த அதிரடி ஆட்டத்தையும் தாண்டி அவர் சதம் அடிக்க வேண்டும் என்பதே ரோஹித் சர்மா ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT