ஐபிஎல்லில் முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ந்து விளையாடுவாரா? வெளியான தகவல் என்ன?

பங்களாதேஷ் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.

ஐபிஎல்லில் முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ந்து விளையாடுவாரா? வெளியான தகவல் என்ன?
ADVERTISEMENT
ADVERTISEMENT

பங்களாதேஷ் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் இருக்கிறார். ஆனால் முஸ்தபிசுர்  ரஹ்மான் அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

காரணம் வருகின்ற ஜூன் மாதம் ஐசிசி T20 உலகக்கோப்பை தொடங்க இருப்பதால் பயிற்சிகளை மேற்கொள்ள அவர் பங்களாதேஷ் செல்கிறார் என்று கூறப்பட்டது.

அவர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்பதால் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் பிசிசிஐ பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம்  முஸ்தபிசுர்  ரஹ்மான் விளையாட அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்திருந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில்  மே 1 ஆம் திகதி பஞ்சாப் கிஸ் அணிக்கு எதிரான போட்டி வரை விளையாட  முஸ்தபிசுர்  ரஹ்மானுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ஷஹ்ரியார் நஃபீஸ், “ முஸ்தபிசுருக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரை ஐபிஎல்லில் விளையாடுவதற்கு விடுமுறை அளித்திருந்தோம்.

ஆனால் மே 1ஆம் திகதி சென்னையில் போட்டி இருப்பதால், சென்னை மற்றும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று அவரது விடுமுறையை ஒரு நாள் நீட்டித்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார். 

மீண்டும் முஸ்தபிசுர் அணியில் இணைய இருப்பது சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT