காதலியின் தாயை அச்சுறுத்த டிக்-டொக் வெளியிட்ட சிறுவன்

பாடசாலை மாணவியான சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காதலியின் தாயை அச்சுறுத்த டிக்-டொக் வெளியிட்ட சிறுவன்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 சிறுமி  ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு,  வாள் மற்றும் கூரிய ஆயதங்களுடன் டிக்-டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்த  குற்றச்சாட்டில் சிறுமியின் காதலனும் நண்பனும்  சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவியான சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, 17 வயதுடைய சிறுவனும் அவனது நண்பனும் வாள் மற்றம் கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு பாடல் இசையை இணைத்து டிக்-டொக் செயலியில் வீடியோவாக பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து, சனிக்கிழமை காலை 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து விடுவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT