இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT