மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

மீட்டியாகொட தெல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, ​​வீட்டில் பதுங்கியிருந்த சந்தேக நபர் துப்பாக்கியால் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போது சந்தேக நபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அண்மையில் காலி, கரகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தகமுனி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT