மற்றுமொரு தாயும் சிறுமியும் காணவில்லை

மற்றொரு தாயும் சிறுமியும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மற்றுமொரு தாயும் சிறுமியும் காணவில்லை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மற்றொரு தாயும் சிறுமியும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பில் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹகுரன்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதுடைய 8 மாத பெண் குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.

குறித்த பெண்ணின் தாயார், இது தொடர்பில் நேற்று (20) ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபரும் அவரது சிறிய மகளும் காணாமல் போன தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு அந்த பெண்ணும் அவரது மகளும் பஸ்சில் வந்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று (21) காலை வீட்டுக்கு அருகிலுள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -