மற்றுமொரு பேருந்து விபத்து; இருவர் உயிரிழப்பு
அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
யாத்திரீகர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையிலும், மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT