வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; அதிகரிக்கும் மழை 

பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; அதிகரிக்கும் மழை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (08) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. ஆக இருக்கலாம்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT