ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க சஜித் இணக்கம்

இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க சஜித் இணக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டம் இன்று(26) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க தீர்மானித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், இந்தக் கூட்டத்தில் மக்கள் சார்பில் கலந்து கொண்டாலும் அரசியல் சதிகளில் சிக்குவதற்கு தயார் இல்லையென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இந்த சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி இன்றைய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT