திருட்டு சம்பவத்தால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருமான வரி வரை சென்ற சோகம்

கிட்டத்தட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போன சம்பவத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருட்டு சம்பவத்தால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருமான வரி வரை சென்ற சோகம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அண்மையில் சூப்பர்ஸ்டாரின் மூத்தமகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் காணாமல் போனதாக செய்தி வெளியானது.

கிட்டத்தட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போன சம்பவத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

போலிஸாரின் விசாரணையில் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த வேலைக்காரியும், அவரது கார் ட்ரைவரும் பிடிபட்டனர். அந்த வகையில் வேலைக்காரியிடம் 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரில் 60 பவுன் மட்டுமே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் போலீசார் கேள்விக்கேட்ட நிலையில் மழுப்பலான பதிலை கூறினார்.

தனக்கு மீதமுள்ள நகைகளை பற்றி தெரியவில்லை, ஒருவேளை எனது நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த நகையாக இருக்கலாம் என்று பதில் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவரது பதிலின் மீது சந்தேகமடைந்த போலீசார்,கணக்கில் வராத நகைகள் குறித்து வேலைக்காரியிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தலையில் குண்டை தூக்கிப்போடும் விதமாக நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்று தைரியமாக கூறினார்.

இதனால் தற்போது கணக்கில் வராமல் இதுபோன்று எவ்வளவு சொத்துக்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்த்து வைத்துள்ளார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு ரஜினியிடம் தற்போது இந்த பிரச்சனை அவரது வீடு வரை வந்துள்ளது. 

இன்னும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மற்ற சொத்துக்கள் மற்றும் வீடுகளில் எவ்வளவு கணக்கில் வராத சொத்துக்கள் உள்ளது என்பதை அறிய வருமான வரித்துறை வரை இந்த விஷயம் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்துக்கொண்ட போது, ரஜினி மிகவும் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து மன வேதனையில் இருந்தார். 

அப்போது அவருக்கு உடல் நிலை கூட சரியில்லாமல் போனது. எல்லாம் கடந்தது போல இதையும் கடந்து வந்த ரஜினி, மகளின் கனவு பணியான இயக்குனர் அவதாரத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்.

மேலும் லைக்கா தயாரிப்பில் அவர் இயக்க உள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் ரஜினி ஒப்புக்கொண்டார். இப்படி தனது மகளுக்காக பல வேலைகளை செய்து வரும் ரஜினிகாந்துக்கு, தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக தனது மகள் செய்த காரியத்தால் ரஜினிகாந்த் மேலும் கவலையடைந்து உடல்நிலை பாதிப்புக்கு உள்ளார் என கூறப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT