பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி

இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து. இவர் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து. இவர் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 

இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, 'எதிர் நீச்சல்' தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். 

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்துவின் உடல் இன்று மாலை வரை சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இரவு அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT