கேக் கொள்வனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

கேக் கொள்வனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் கேக்குகளை பண்டிகைக் காலத்தில்  வாங்க வேண்டாம் என அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில், 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

“கொழும்பு துறைமுகத்திலிருந்து பெறப்பட்ட முட்டைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கொழும்பு துறைமுகத்திலுள்ள முட்டைகள் 7 நாட்களாக அங்கேயே இருக்கிறது.

இந்த திரவ முட்டைகள் மிக வேகமாக அழுகக் கூடியவை. மேலும் அவற்றை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுவது அமைச்சரின் பொறுப்பாகும்.

குறித்த முட்டைகளை உபயோகித்து புத்தாண்டுக்கு கேக்குகளைத் தயாரிக்க வேண்டாம் என வெதுப்பக உரிமையாளர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். வெதுப்பக உரிமையாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உபயோகித்தால் கேக்குகளை வாங்குவதைப் புறக்கணிப்போம்.

துறைமுகம் மற்றும் சுங்கம், முட்டைகளை சேமித்து வைத்து இறக்குமதி ஏற்றுமதி விதிமுறைகளை மீறியுள்ளது. எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் நிலைப்பாடு பற்றி ஆராய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என ஊடக சந்திப்பொன்றில்  அசேல சம்பத் கூறியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -