ஆசிரியர்களின் விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களின் விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதாவது 18-08-2023 முதல் 27-08-2023 வரை நடைபெறவுள்ள பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இரண்டு நாட்கள் கடமை விடுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, அந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 28-08-2023 மற்றும் 29-08-2023 ஆகிய திகதிகளில் விடுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த விடுப்புக்கு ஒப்புதல் பெற, மேற்கூறிய அதிகாரிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளில் தாங்கள் பங்கேற்றதற்கான வருகை சான்றிதழை சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT