அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது

செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

13 இலட்சத்து 77 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பணமானது, பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நாளை முதல் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான பரிசீலனைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், அவர்களுக்கான கொடுப்பனவு கடந்த ஜூலை மாதம் முதல் அமுலாகும் வகையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும பெயர்ப்பட்டியலை இந்த இணைப்பில் சென்று பார்வையிட முடியும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT