இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்... பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் 75 மி.மி. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்... பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் 75 மி.மி. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர