முடிவுக்கு வந்த காத்துவாக்குல 2 காதல் ஷூட்டிங்

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

முடிவுக்கு வந்த காத்துவாக்குல 2 காதல் ஷூட்டிங்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் தான் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனை படக்குழு அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை சமந்தா உள்ளிட்டோர் இந்த படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT