இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களுக்கு 75 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகலாம். கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (28) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களுக்கு 75 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகலாம். கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT