கல்கிசையில் ரூ. 24 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை: சந்தேகநபர் கைது

அதனடிப்படையில், முறைப்பாடு அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.
கல்கிசையில் ரூ. 24 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை: சந்தேகநபர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்கிசை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 24,000,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, கல்கிசை பொலிஸ் அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (21) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த 18ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், மறுநாள் 19ஆம் திகதி காலை அவர் மீண்டும் வீடு திரும்பிய போதுதான் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதை அறிந்து, பொலிஸாருக்கு உடனடியாக முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாடு கிடைக்கப்பெற்றதும் கல்கிசை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர். அதனடிப்படையில், முறைப்பாடு அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர