சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை

சந்தேகநபரை 1 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை
ADVERTISEMENT
ADVERTISEMENT

‘சிரிலியா சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கிலிருந்து நிதியை முறையற்ற வகையில் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது பிணை வழங்கி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேகநபரை 1 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
 
அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் 10 மில்லியன் ரூபாய் நிதியை, ‘சிரிலியா சவிய’ அமைப்புக்கு சட்டவிரோதமான முறையில் மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சிராந்தி ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT