கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ

தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி ஷிரந்தி ராஜபக்ஷ, தாக்கல் செய்த முன்பிணை மனுவை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் இன்று(12) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி ஷிரந்தி ராஜபக்ஷ, தாக்கல் செய்த முன்பிணை மனுவை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, ஒக்டோபர் 7ஆம் திகதி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு ஒரு CT ஸ்கேனரை வாங்குவதற்காக, சிறிலிய சவிய அமைப்பின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து (NSB) ரூ. 10 மில்லியன் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT